சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1985 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில், 189 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக 1985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். . இதன்மூலம் மொத்த பாதிப்பு 25,71,383 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 30பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்னர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 34,260 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 1,908 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,16,938 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 20,185 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
சென்னையில் நேற்று 189 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 53,92,91 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் சேர்த்து, இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8335 ஆக அதிகரித்துள்ளது மேலும் 155 பேர் குணமடைந்து வீடு திருமபிய நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,90,46 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை 1910 ஆக உள்ளது.
06.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 32,95,205 பேருக்கும், 06.08.2021 அன்று 18,870 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்: