லண்டன்: இந்தியாவில் எங்களது சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்தியஅரசிடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்து தயாரிப்பு நிறுவனம் அவசர கால பயன்பாட்டுக்காக உபயோகிக்க அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளது.
ஏற்கனவே ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் ஷாட் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து, மெக்சிகோ உள்பட பல நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, அந்த நாடுகளில் சிக்கில் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதையடுத்து, இந்தியாவிலும் அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளது.
ஏற்கனவே ஜான்சன் நிறுவனம் தடுப்பூசிக்கு விண்ணப்பம் செய்திருந்தது. அதில், தடுப்பூசியால் பின்விளைவுக்கு பொறுப்பேற்க முடியாது, இழப்பீடு வழங்க மாட்டோம் எ என்று கூறியதால், விண்ணப்பத்தை ஏற்பதில் சிக்கல் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்திருந்தார். இதனால் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக்கோரி விண்ணப்பம் அளித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் சில புதிய தடுப்பூசிகளை இந்தியா நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அவை ஆகஸ்டு செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜான்சன் உள்பட பல தடுப்பூசி தயாரித்து வரும் நிறுவனங்கள் அனுமதிகோரி விண்ணப்பித்து வருகின்றன.
ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்…