பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார்.
கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலை இம்மாத இறுதியில் பரவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பல மாநில அரசுகள் பள்ளிகளைதிறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று நடைபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடனான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கில் மேலும் சிறிது தளர்வு அறிவிக்கப்பட்டு, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.