வாஷிங்டன்: 65வயதாகும் பில்கேட்ஸ் தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதனால் அவர்களது 27வருட திருமண பந்தம் முறிந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில்கேட்ஸ். மனைவி மெலிண்டா கேட்ஸ் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர். உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்சின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக, விவாகரத்துக்கு முன் இருந்தது. விவாகரத்து ஆனாலும் பில் அண்ட் மெலிண்டா அறக்கட்டளையில் இணைந்து செயல்பட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
பில்கேட்ஸும் மெலிண்டாவும் காதலித்து 1994 ஆண்டு ஹவாய் தீவில் திருமணம் செய்துகொண்டனர்.இருவருக்கும் திருமணம் ஆகி 27ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களது விவாகரத்து அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இருவரும், பில்கேட்ஸ் (65). இவர் மனைவி மெலிண்டா (56). இவர்கள் கடந்த மே மாதம் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். 27 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த இவர்களின் திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதைத்தொடர்ந்து விவகாரத்து வழக்கானது கிங் கவுன்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் பல்வேறு கட்ட விசாரணையைத் தொடர்ந்து,தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது. தீர்ப்பில், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில்கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டாவும் சட்டப்படி பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வாஷிங்டன் நகர வழக்கப்படி, விவகாரத்து கோரி நீதிமன்றத்துக்கு சென்றால் 90 நாட்களுக்கு பிறகே அதிகாரப்பூர்வமாக வாங்கப்படும். அதன்படி இப்போது வழங்கப்பட்டுள்ளது.