வாஷிங்டன்

னவாத சவால்களை எதிர்க்க நிரந்தர அமைப்பு ஒன்றை ஐநா உருவாக்குகிறது

உலகெங்கும் இன வேற்றுமை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.  குறிப்பாக ஆப்ரிக்கா நாட்டினரை கறுப்பின மக்கள் என மேல் நாடுகளில் ஏளனம் செய்வது அதிகரித்து வருகிறது.  இதனால் கறுப்பின மக்களிடையே கடும் அதிருப்தி உருவாகி அது பல நேரங்களில் வன்முறையாக மாறுகிறது.   இதை ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபை பல நடவடிக்கைகளை எடுத்ஹ்டு வருகின்றன.

எனவே ஐநா சபைக் கூட்டத்தில் இனவாத சாவல்களை எதிர்கொள்ள ஒரு நிரந்தர அமைப்பை நிறுவத் தீர்மானம் அளிக்கப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு ஐநா சபையில் 191 உறுப்பினர்களாலும் ஒரு மனதாக ஏற்கப்பட்டுள்ளது.   இந்த அமைப்பு ஆப்ரிக்கா வம்சாவளியினரின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு தளமாக செயல்பட உள்ளது.

இது குறித்து ஐநா சபை ”அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும் கவுரவம் மற்றும் உரிமைகளில் சமமாகவும் பிறக்கின்றனர்.  அவர்களின் சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு சரியாக இல்லாத காரணத்தினாலேயே பின் தங்கி விடுகின்றனர்.  எந்த ஒரு இனமும் உயர்ந்தது அல்ல.  அவை எல்லாம் அறிவியல் ரீதியாகப் பொய்யானவை ஆகும்.

இவ்வாறு நினைப்பதே கண்டிக்கத்தக்க ஒழுங்கீனமாகும்.  இவை எல்லாம் மனிதக் குலத்துக்கு ஆபத்தானவை  இனவெறி, இனபாகுபட்டை அழித்து சகிப்புத் தன்மையை   வளர்க்க இந்த அமைப்பு பாடுபடும்..  இந்த அமைப்பின் முதல் கூட்டத்தொடர் வரும் 2022ல் நடக்க உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.