சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில்  முன்னாள் சென்ற  இரு சக்கர வாகனம் மீது மோதி நிற்காமல் சென்ற கார் தொடர்பான பதபதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, நெடுஞ்சாலைகளில் வாகனப்போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு வாகனங்கள் முழுமையாக இயக்கப்படாத நிலையில், வெறிச்சோடி கிடக்கும் சாலையில் தனியார் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. போக்குவரத்து காவல்துறையும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால், கார் போன்ற வாகனங்களை அதன் உரிமையாளர்கள் கண்மூடித்தனமான வேகத்தில் ஓட்டிச்செல்கின்றனர்

இந்த நிலையில், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அசூர வேகத்தில் கண்மூடித்தனமாக காரை ஓட்டி வந்தவர், முன்னாள் சென்ற காரை முந்திச் செல்லும்போது, அதன் அருகே  சாலையின் ஓரமாக சென்றுகொண்டிருந்த  இருச்சக்கர வாகனத்தின்மீது மோதியதுடன் காரை நிறுத்தாமல் சென்றார்.

கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட இரு சக்கர வாகனம் பல மீட்டர் தூரம் சாலையில் உருண்டது. அதில் பயணம் செய்த  இரு இளைஞர்களும் சாலையோரம் தூக்கி விப்பட்டனர். . அவர்களின் ஒருவர் நிலைமை அபாயக்கட்டத்தில் உள்ளது. இது தொடர்பான நெஞ்சை பதைபதைக்கும்  வீடியோ வைரலாகி வருகிறது.