டெல்லி: மத்திய கல்வி வாரியத்தின், ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா 2வது அலையின் கடுமையான தாக்கம் காரணமாக, நடப்பாண்டு, நாடு முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல சிபிஎஸ்இ, ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 12மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்திருந்தது.
இந்த நிலையில், உள் மதிப்பீட்டுக் கொள்கை அடிப்படையில் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி வகுப்பு 10 மற்றும் வகுப்பு 12 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று பிற்பகல் 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று இந்திய பள்ளி சான்றிதழ் கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் cisce.org மற்றும் results.cisce.org ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் கிடைக்கும்.