ஐந்து வயதுச் சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே புரிதல் உண்டாவதைப் பற்றிப் பேசுகிறது ‘பௌ பௌ’ திரைப்படம்.

பெற்றோரை ஒரு விபத்தில் பறிகொடுத்த சிறுவன் சஞ்சு, தன் தாத்தா பாட்டியுடன் வசிக்கிறான்.

ஒருநாள் தெருநாய் ஒன்று சஞ்சுவைத் துரத்துகிறது. திரும்பத் திரும்ப அந்த நாய் தொந்தரவு தர, அதனைப் பழிவாங்கும் வகையில் புதிதாக ஒரு நாய் வளர்க்க ஆசைப்படுகிறான்.

ஸ்கூபி எனும் நாயை சஞ்சு வீட்டுக்கு அழைத்து வர, அது சோம்பலுடன் திரிவதைக் கண்டு எரிச்சலடைகிறான். மெதுமெதுவாக ஸ்கூபியும் மாற்றமடைகிறது. ஆனால், திடீரென்று ஒருநாள் அது அவனை விட்டுப் பிரிந்து செல்கிறது. இதனால் சோகத்தில் தவிக்கிறான் சஞ்சு.
மீண்டும் ஸ்கூபி சஞ்சுவிடம் வந்து சேர்ந்ததா என்பதுடன் படம் நிறைவடைகிறது.

இந்நிலையில் நமிதா தயாரிப்பில் தற்போது உருவாகும் Bow Wow என்ற தலைப்பு சற்று குழப்பத்தை உருவாகியுள்ளது. சினிமா பின்னணி அல்லது பின்புலம் இருந்தால் மட்டுமே இங்கே எதையும் சாதிக்க முடியும் என எண்ணத்தை உருவாகியுள்ளதாக ‘பௌ பௌ’ திரைப்பட இயக்குனர் பிரதீப் மனவருத்தத்துடன் கூறியுள்ளார் .

வணக்கம்… ஒரே பார்வையில் “Bow Bow” மற்றும் “Bow Wow” ஆகிய இரண்டு தலைப்புகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் கண்டு பிடிக்க முடியுமா! கண்டிப்பாக இல்லை … ஏனென்றால் இன்றைய தினதந்தி செய்தித்தாள் கூட குழப்பமடைந்து அவர்கள் “Bow Wow” என்பதற்கு “Bow Bow” என்று எழுதியுள்ளனர் .என் கருத்து என்னவென்றால் … சினிமாவில் எந்தவிதமான பின்னணியும் இல்லாதவர்கள் மற்றும் ஒரு தனி ஆளாக உழைத்து தங்கள் கனவு பயனத்தை நோக்கி செல்பவர்கள் இப்படி ஒரு தலைப்பை போன்று இன்னொரு தலைப்பை பதிவு செய்ய முடியாது, அதில் ஒரு வார்த்தை அல்லது எழுத்து மற்றொரு திரைப்பட தலைப்பு போன்று இருந்தால் உங்கள் தலைப்பு எங்கும் எங்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.கில்ட் அல்லது கவுன்சில் அல்லது சேம்பர் நாம் எங்கு சென்றாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் உங்களுக்கு cinema பின்னணி அல்லது பின்புலம் இருந்தால் இங்கே எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதே தலைப்பை கூட பதிவு செய்யலாம்.
எனவே இப்பொழுது திருமதி நமிதா அவர்கள் மற்றும் அவரது தயாரிப்பில் உருவாகும் Bow Wow என்ற தலைப்பை நாங்கள் Bow Bow என்று பதிவு செய்த அதே கில்ட் இவர்கள் தலைப்பயும் பதிவு செய்துள்ளது.எப்படி!!
நாங்கள் எங்கள் Bow Bow திரைப்படத்தை ஏற்கனவே release செய்து விட்டோமே பிறகு ஏன் கவலை என நீங்கள் கேட்க்கலாம்…
ஆமாம் விஷயம் என்னவென்றால், இந்த Bow Bow திரைப்படத்தை 6 இந்திய பிராந்திய மொழிகளில் நேரான திரைப்படமாக உருவாக்கியுள்ளோம். நாங்கள் அனைத்து பணிகளையும் முடித்துள்ளோம். பிற மொழிகளில் (மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காளி) வணிக ரீதியான வியாபார பேச்சுவார்த்தையில் இருக்கும்போது, ​​அனைவரும் இப்போது கேட்க்கத் தொடங்கியுள்ளனர், நமீதா மாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா! என்று.
ஏனெனில் கண்டிப்பாக பிரபலமான நடிகர், அவர்களுக்கு தான் எல்லோரும் முன்னுரிமை தருவார்கள் .
எனவே இப்போது இது மற்ற மொழிகளில் Bow Bow – ன் வியாபாரத்தை பாதிக்கத் தொடங்கியுள்ளது. எப்படி!?
பதில்….இப்போது முக்கிய வணிகம் செயற்கைக்கோள் மற்றும் OTT தளங்கள். எனவே ஒரு தொலைக்காட்சி அல்லது OTT ஒரு திரைப்படத்தை வாங்கினால் அவர்கள் அதே தலைப்புகளின் திரைப்படத்தை வாங்க மாட்டார்கள் அல்லது உதாரணமாக திருமதி. நமிதாவின் திரைப்படம் ஒரு சேனல் அல்லது OTT ஆல் வாங்கப்பட்டு அவரது Bow Wow திரைப்படத்தை விளம்பரப்படுத்தியிருந்தால் மற்றொரு சேனல் அல்லது OTT BowBow திரைப்படத்தை வாங்காது.
அவர்கள் இந்த திரைப்படத்தை இந்த பெயருடன் விளம்பரப்படுத்த முடியாது, ஏனெனில் இது பார்வையாளர்களையும் ஒவ்வொருவரையும் குழப்பும் .
இப்போது பாருங்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களே இன்று குழப்பமடைந்து Bow Wow க்கு Bow Bow என எழுதியுள்ளார்கள் .
நான் கேட்பது என்னவென்றால், ஒரு தலைப்பை வைப்பதற்கு முன்பு மற்ற தயாரிப்பாளரின் (Bow Bow) வலியைப் பற்றி யாராவது யோசிக்க மாட்டார்களா அல்லது அதில் நடித்த குழந்தையின் வலியைக் கூட நினைக்க மாட்டார்களா ! ஒரு படைப்பாளராக நாம் பல தலைப்புகளைப் பற்றி சிந்திக்கலாம் எனும்போது , ​​அதே போன்ற தலைப்பை அவர்கள் ஏன் வைக்கவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வளவு காஞ்சு போயிட்டோமா என்ன!!!
சொந்தமா கதை யோசிக்க தலைப்பு யோசிக்க முடியாத அளவுக்கு காஞ்சு போயாச்சா!!!
ஏற்கனவே பதிவு செய்த தலைப்பை போன்ற ஒரு தலைப்பை பதிவு செய்ததற்க்காக கில்டி-ற்க்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு தலைப்பு பதிவு செய்வது வழங்குவது ஒரு வியாபாரம் மட்டுமே .
Bow Bow Vs Bow Wow
மாஸ்டர் அஹான் Vs திருமதி. நமிதா

Hi can any one in a glance find difference between these two titles “Bow Bow” and ” Bow Wow” . I don’t think so … Because even today’s Dhinathanthi news paper got confused and they have written as “Bow Bow” for “Bow Wow”.My point is… Those who don’t have any kind of background in cinema and are lone fighters towards their passion cannot register a title in which a single letter or word is similar to another movie title. Wherever we go they won’t accept whether is guild or council or chamber. But if you have background then you can achieve anything here. You can register even exact same title.
So here it is… Bow Wow by Mrs.Namitha Mam and her production. Guild has registered the title when already we have registered and released our movie in Tamil.
You may ask as we have released what’s there to worry!
Yes the thing is we have made this Bow Bow feature film in 6 Indian regional languages as straight movie. We have completed all works.In process and talks for business in other languages ( Malayalam, Kannada, Telugu, Hindi and Bengali).
When we are in talks, all have now started to ask , has Namitha Mam has done the lead role! Because obviously established actor will be their priority.
So now it has started to affect the business of Bow Bow in other languages. How!?
Answer is now main business is Satellite and OTT platforms. So if some channel or OTT is buying a movie they won’t buy movie of same titles or for example if Mrs.Namitha’s movie is bought by one channel or OTT and have promoted her movie Bow Wow then another channel or OTT won’t buy Bow Bow as they cannot promote this movie with this name as it will confuse audience and every one.
See now press and media itself today has got confusion and written as Bow Bow for Bow Wow.
What I am asking is before keeping a title won’t some one even think about the pain of other producer (Bow Bow) or atleast the pain of kid who has acted in it! I even don’t know how they think of such title when as a creator we can think of many different titles.
And hats off to Guild for registering same kinda title as registration is just a business for them.
Bow Bow Vs Bow Wow
Master Ahaan Vs Mrs.Namitha