டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் நடிகர் கமல் ஹாசன் காணொளி மூலம் உரையாடினார்.
தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.
“வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான ‘உலக நாயகர்கள்’ என்று போட்டியாளர்களை பாராட்டிய கமல், இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ”ஒரு பெரிய பேரரசு கூட 500 வருடத்திற்கு மேல் கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்.” என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும். pic.twitter.com/UOjIHvetEn
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2021