பிரபல நடிகை மந்திரா பேடியின் கணவரும், பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜ் கௌஷல், இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இவரது இறுதி ஊர்வலத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) தான், ராஜ் மற்றும் மந்திரா ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துக் கொண்டனர். அதற்குள் இப்படியொரு சம்பவத்தை நம்ப முடியாமல் தவிக்கிறார்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இப்போது, அவர் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.