நல்லா குண்டா கொழு கொழுன்னு இருந்த பிக் பாஸ் பிரபலம் தான் ஏன் உடல் எடையை குறைத்தேன் என்பதை வெளிப்படையாக கூறி கூகுள் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஷெனாஸ் கில்.
பஞ்சாபி நடிகையான ஷெனாஸ் கவுர் கில் கடந்த பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டார். 2017ம் ஆண்டு வெளியான சத் ஸ்ரீ அகால் இங்கிலாந்து எனும் பஞ்சாபி படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர்,
இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் யூடியூப் லைவ் ஒன்றில் உரையாடிய ஷெனாஸ் கில்லிடம் ரசிகர் ஒருவர் குண்டாக அழகா இருந்தீங்க, அந்த ஷெனாஸ் தான் எங்களுக்கு பிடித்திருக்கு ஏன் உடல் எடையை குறைச்சீங்க என கேள்வி எழுப்பி உள்ளார்.
இங்கே ஒல்லியான பெண்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வருகிறது. குண்டாக இருந்தால் சீண்டவே மாட்டார்கள் என சினிமாவில் பெண்கள் மேல் இருக்கும் பார்வையை கூறினார்.
தன்னால் ஜிம்முக்கு போய் வொர்க்கவுட் எல்லாம் பண்ண முடியாது என டிரெய்னர்களிடம் கூறி விட்டேன். அவர்கள், அதற்கு மாறாக உப்பு மற்றும் சர்க்கரையை உணவில் இருந்து குறைக்க வேண்டும் என்று கூறினர். அந்த இரண்டுமே இல்லை என்றால் சாப்பிடவே பிடிக்காது, குறைவாக சாப்பிட ஆரம்பித்தேன், என் உடம்பு குறைந்து விட்டது என தனக்கே உரிய பாணியில் ஷெனாஸ் கில் கூறியுள்ளார்.