மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிஃபர். லூசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் ரிமேக் செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகியது. ஆந்திரா சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இயக்குநர் மோகன் ராஜா இப்படத்தை இயக்குகிறார் .மோகன் ராஜா இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக உள்ளஇந்த சிரஞ்சீவி 153 திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் R.B.சௌத்ரி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்திரைப்படம் முழு ரிமேக்காக இருக்காது எனவும், ஒரு தழுவலாக மட்டுமே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசையமைப்பாளர் S.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.