கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு தண்ணீர் விட்டும், பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும், சுழற்சி முறையில், நாள் ஒன்றுக்கு 6.00 மில்லியன் கன அடி வீதம், 01.07.2021 முதல் 12.11.2021 வரை, மொத்தம் 135 நாட்களுக்கு, 2397 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 379.44 மில்லியன் கன அடிக்கு மிகாமல், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது என அரசு கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel