ராம் குமார் இயக்கத்தில் தமிழில் வெளியான ராட்சசன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அக்ஷய் குமார், விஷ்ணு விஷால் நடித்த வேடத்திலும், ரகுல் ப்ரீத் சிங், அமலா பால் நடித்த வேடத்திலும் நடிக்க உள்ளனர்.

ரஞ்சித் திவாரி இப்படத்தை இயக்குகிறார் . அக்ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்தின் இயக்குனர் இவரே .

ராட்சசன் இந்தி ரீமேக்கை ஆகஸ்டில் தொடங்குவது என முடிவு செய்துள்ளனர். யுகேயில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்த வருடம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்தி டப்பிங் யூடியூபில் ஒரு வருடம் முன்பு வெளியானது. இதுவரை இரண்டரை கோடிக்கும் அதிகமானவர்கள் இதனை பார்த்துள்ளனர்.