அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர், அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து அவ்வப்போது அமெரிக்கா சென்று தனது உடல்நிலையை நடிகர் ரஜினிகாந்த் பரிசோதித்து வருகிறார்.

இந்நிலையில், மயோ க்ளீனிக்கில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யாவுடன் நடிகர் ரஜினிகாந்த் நடந்துவருவது போன்ற புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியானது. தலையில் தொப்பி, டீ.சர்ட் அணிந்தபடி ரஜினிகாந்த் நடந்துவரும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக ஊடகத்தில் வைரலாக்கி வருகின்றனர்.