இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் ஞாயிறு இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கிறது.
இவர்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்துகிறார் ஷங்கர். பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்து வருகிறார். இவர் 2.0 படத்தின் கலை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.