சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 4.6 சதவீதமாக சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 6ஆயிரத்துக்கும் குறைவாகவே தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் 50க்கும் கீழே உள்ளது.
கடந்த இரு மாதங்களாக தமிழகத்தை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரசின் 2வது அலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 24,43,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நேற்று 166 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 31,746 பேர் உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில் தொற்றின் பிடியில் இருநது 10,432 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 23,58,785 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் 52,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி வரை தினசரி பாதிப்பு 6.1 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு ஒரு வாரத்தில் 4.6 சதவீதமாக சரிந்துவிட்டது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து 596 ஆக குறைந்துள்ளது. அதே போல் பலி எண்ணிக்கையும் 166 ஆக குறைந்துள்ளது. மேலும் சென்னையிலும் 7 ஆயிரத்துக்கு மேல் பதிவான தினசரி பாதிப்பு இப்போது 396 ஆக குறைந்து இருக்கிறது. தென்காசி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 50-க்கு கீழ் குறைவானது. 17 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நூறுக்கு கீழ் குறைந்துள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்று 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத் எண்ணிக்கை 5,30,432ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில், 20 பேர் உயிர் இழந்துள்ளார். இதுவரை 8,115 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதுபோல தொற்றில் இருந்து nநற்று 282 பேர் குணம் அடைந்து உள்ளனர். இதுவரை 5,18,870 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் மட்டும் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,447 ஆக உள்ளது.
அதே நேரம் தடுப்பூசிகளும், அதிக எண்ணிக்கையில் போடப்பட்டு வருகிறது. பொது மக்களும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்வது பேன்ற விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மண்டலம் வாரியாக விவரம்: