சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

‘தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு, 2021-2022 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகளாக, ஜனவரி 1ந்தேதி 2021 அன்று 58 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.  ஆண்டு வருமானம் ரூ.72000க்குள் இருக்க வேண்டும் , வருமானச் சான்றிதழ், தமிழ்ப்பணி ஆற்றியதற்கான சான்றுகளுடன் அரசின் இணையதளமான www.tamilvalarchithuria.com என்ற தளத்தில்ர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.