அருண் விஜய் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் பார்டர். அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளார் . இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
தற்போது இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் சகஜநிலை திரும்பி, திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில் பார்டர் படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என தயாரிப்பு தரப்பு உறுதி அளித்துள்ளதால் அருண் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆகஸ்ட் 12-ம் தேதி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.