கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நிறைய பிரபலங்களும் மறைந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தொரட்டி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ஷமன் மித்ரு தற்போது கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்.
கடந்த ஒரு மாத காலமாக கொரோனா காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷமன் மித்ரு இன்று காலை உயிரிழந்தார்.