சென்னை: கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இன்று முதல்  கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு  ரயில்வே துறை அறிவித்து உள்ளது. அதன்படி, நேற்று வரை 279 சேவைகள் நடைபெற்ற வந்த நிலையில், இன்று 323 சேவைகளாக உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என 323 மின்சார ரயில் சேவை இயக்கப்படும். ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.