டில்லி

ந்தியாவில் நேற்று 68,362 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,362 அதிகரித்து மொத்தம் 2,95,07,438 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,880 அதிகரித்து மொத்தம் 3,74,287 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,13,003 பேர் குணமாகி  இதுவரை 2,81,48,977 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 9,72,577 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 10,442 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,08,992 ஆகி உள்ளது  நேற்று 2,771 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,11,104 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,504 பேர் குணமடைந்து மொத்தம் 56,39,271 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,55,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,810 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,65,134 ஆகி உள்ளது  இதில் நேற்று 125 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 18,646 பேர் குணமடைந்து மொத்தம் 25,51,365 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,80,835 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 11,584 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,28,240 ஆகி உள்ளது.  இதில் நேற்று 206 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,182 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,856 பேர் குணமடைந்து மொத்தம் 25,93,625 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,23,006 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 14,016 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,53,721 ஆகி உள்ளது  இதில் நேற்று 267 பேர் உயிர் இழந்து மொத்தம் 29,547 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 27,463 பேர் குணமடைந்து மொத்தம் 21,74,247 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,49,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 6,770 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,09,844 ஆகி உள்ளது.  நேற்று 58 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,940 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,492 பேர் குணமடைந்து மொத்தம் 17,12,267 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 85,637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.