மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 10.402 மற்றும் கர்நாடகாவில் 7,810 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 10,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 59,08,992 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 483 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,11,104 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 7,504 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 55,39,271 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,55,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 7,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,65,134 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 125 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 32,913 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 18,648 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 25,51,365 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,80,835 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.