வாணியம்பாடி:
சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்தது.
65 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாமல் தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு காரணம் என்று கட்சி நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி வருவது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது என்றும், ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என்று தெரிவித்துள்ளார்.