சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார்.

தற்போது அவருக்கு பல கோடி கடன் இருப்பதாக செய்திகள் உலா வருகிறது. கடனை அடைத்தே தீர வேண்டும் என்கிற நிலையில் இரண்டு ஆண்டுகளில் எங்கள் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கிறீர்களா என்று சன் டிவி கேட்க, ஓகே சொல்லியுள்ளார் சிவகார்த்திகேயன்.

ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். ஆக ரூ. 75 கோடி சம்பளம் கிடைக்கும். அதில் ரூ. 70 கோடி கடனுக்கே போய்விடும் என்று கூறப்படுகிறது.