புதுடெல்லி:
குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் சுஷில் குமாரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. சமீபத்தில் ராணா தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் கிடந்த தன்கட்டை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார்.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் சுஷில் குமார்.

சுஷில் குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் ராணா தன்கட்டை தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தரையில் விழுந்துக் கிடக்கும் ராணா தன்கட்டை சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் சூழ்ந்து நின்று கொண்டு சரமாரியாக தாக்குகின்றனர். இந்த தாக்குதலுக்குப் பிறகே ராணா தன்கட் உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சுஷில் குமாரை போலீசார் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், 4 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.