சென்னை: தமிழகத்தில், தனியார் மருத்துவமனைகளிலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறலாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து, தற்போது, கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசு வழங்கும் கட்டணம் எவ்வளவு என்பதை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டது உள்ளது. மருத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கொரோனா தொற்று சிகிச்சைகளுக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான கட்டண விவரத்தை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி
சாதாரண சிகிச்சை, அதாவது ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் (ஏ 3 முதல் ஏ 6 தரவரிசையில் உள்ள தனியார் மருத்துவமனைகள்), ரூ.7 ஆயிரம் (ஏ 1 முதல் ஏ 2 தரவரிசையில் உள்ள தனியார் மருத்துவமனைகள்),
ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரமும்,
வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரமும்,
தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதிக்கு ரூ.30 ஆயிரமும்,
ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் ரூ.25 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பொருந்தும். அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel