பாடகி ஸ்ரேயா கோஷல். 2015ஆம் ஆண்டு முகோபாத்யாயாவைத் திருமணம் செய்தார். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைக் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இந்நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். இதுவரை நான் அனுபவித்திராத உணர்வு இது. ஷிலாதித்யா, நான் மற்றூம் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்கள் குழந்தைக்கான எண்ணற்ற ஆசிர்வாதங்களுக்கு நன்றி” என்று ஸ்ரேயா கோஷல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.