சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா ஜீரோ டிலெ வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திறந்துவைத்தார். அவருடன் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் நிரம்பி இருப்பதால், புதிய நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.  நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து,  நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்காமல், மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு அறையில் காத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, 136 படுக்கைகளுடனான “Corona zero delay extension ward”  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் இன்று காலை திறந்து வைத்தார்.

இதன் காரணமாக, இனிமேல் கொரோனா தொற்றாளர்கள் வாகனங்களிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.