சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சி கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 17,34,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 397 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,131 பேர் உயிர் இழந்துள்ளனர். அதேவேளையில் தொற்று பாதிப்பில் இந்து 25,368 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 14,52,283 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,63,390 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்பு தலைநகர் சென்னையில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 6,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சென்னையில் 4,62,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,105 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 4,08,676 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 47,667 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகம் மற்றும் சென்னையில் கொரோனா பாதிப்பு விவரம்: