கொரோனா தொற்று தீவிர பரவல் காரணமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு எழுந்ததால், ஒடிசா மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. அதன்படி கடந்த 27 நாளில், 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 919 டேங்கர்கள் மூலம் சுமார் 16,809 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனைக் வழங்கியுள்ளது.

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நோயாளிகளிக் அதிகரிப்பு காரணமாக, அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளன. நோயாளிகளுங்ககு தேவையான ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழந்த அவலம் நேர்ந்தது. இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து தமிழகம் உள்பட 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த 27 நாட்களில் சுமார் 16,809 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை 919 டேங்கர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.
1,335.942 மெட்ரிக் டன்களுடன் அங்கூலில் இருந்து 83 டேங்கர்களும், 3964.23 மெட்ரிக் டன்களுடன் தெங்கனலில் இருந்து 248 டேங்கர்களும், ஜஜ்பூரிலிருந்து 4717.877 மெட்ரிக் டன்களுடன் 232 டேங்கர்களும், ரூர்கேலாவிலிருந்து 6788.994 மெட்ரிக் டன்களுடன் 356 டேங்கர்களும் அனுப்பப்பட்டது.
இதில், மொத்தம் 282 டேங்கர் மருத்துவ ஆக்ஸிஜன் ஆந்திரத்துக்கும் 236 டேங்கர்கள் தெலங்கானாவிற்கும் 131 டேங்கர் ஆக்ஸிஜன் அரியானாவிற்கும், 61 டேங்கர் மத்தியப் பிரதேசத்திற்கும், 52 உத்தரப்பிரதேசத்திற்கும், 22 டெல்லிக்கு, 3 டேங்கர்கள் பிகாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.