ஜனநாதன், விவேக், தாமிரா, கே.வி.ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, தற்போது நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி எனக் கடந்த சில மாதங்களில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் சக கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இந்நிலையில், பிரபல நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனின் தந்தை கே.டி. சந்திரன் மரணம் அடைந்திருக்கிறார்.
சுதா சந்திரன் தந்தை கே.டி.சந்திரன் பிரபல இந்திப் படங்களில் நடித்த நடிகர் என்பதும் அவருக்கு வயது 86 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுதா சந்திரன், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை குட் பை அப்பா. … உங்கள் மகள் என்பதில் பெருமிதம் …. நான் உங்கள் கொள்கைகளை, அனுபவத்தை , மதிப்புகளை என் வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை பின்பற்றுவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
ஆனால் என் ஒரு பகுதி உங்களுடனே சென்றது அப்பா … நான் மீண்டும் உங்கள் மகளாக பிறக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.