டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும் பலியாகி வருகின்றனர். இதுவரை 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் கடந்த நிலையில், உயிரிழப்புகளும் தினசரி 4ஆயிரத்தை தாண்டி வருகிறது. தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களும் பலியாகி வருகின்றனர். நேற்று நள்ளிரவு பிரபல மருத்துவர் பத்மஸ்ரீ விருதுபெற்ற கே.கே.அகர்வால் கொரானா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில்,  இரண்டாவது அலையில் இறந்த மருத்துவர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இதுவரை 260 மருத்துவர்கள் பலியான நிலையில், தமிழகத்தில் மட்டும் 11 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர்.