மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 26.616 மற்றும் கர்நாடகாவில் 38,603 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 26,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 54,05,068 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 1000 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 82,486 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 48,211 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 48,74,582 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,45,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 38,603பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 22,42,065 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 476 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,313 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 34,635 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 16,16,092 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,03,639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.