மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 37,236. மற்றும் கர்நாடகாவில் 39,305 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 37,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 51,38,973 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 549 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 76,398 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 61,607 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 44,69,425 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,90,818 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 39,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,73,683 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 696 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,372 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 31,209 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,83,285 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,71,006 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.