சென்னை

சென்னை மாநகர காவல்துறை கொரோனா ஊரடங்குக்கான உதவி எண்களை அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி மக்கள் அவசியம் இன்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து மற்றும் மிக அத்தியாவசியமான பயணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக இன்று முதல் தொடங்கி உள்ள ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு அவசர உதவிக்கான அழைப்பை ஏற்க மையம் அமைத்துள்ளது.

இந்த உதவி மையம் பொதுமக்களுக்கு கொரோனா ஊரடங்கு குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் உதவ உள்ளது.  இதில் சாதாரண பயணம் மற்றும் இ ரெஜிஸ்டிரேஷன், முதியோருக்கு உதவுதல், மற்றும் யாருமில்லாத தனிப் பெண்களுக்கு உதவுதல், மருத்துவமனைகளுக்கும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் ஆக்சிஜன் டாங்கர்கள், சிலிண்டர்கள் போக்குவரத்து, அவசிய பொருட்கள், ரெம்டெசிவிர் மருந்து வாங்க உதவுதல் ஆகியவை அடங்கும்.

அனைத்து நாட்களும் 24 மணி நேரம் இயங்கும் இந்த உதவி மையத்தில் ஒரு துணை ஆணையர் மற்றும் காவல்துறை குழுவினர் பணி புரிய உள்ளனர்.  இந்த உதவி மையத்தின் தேவைக்காக மக்கள் 9498181236 மற்றும் 9498181239 ஆகிய எண்களை அழைக்கலாம்

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.