சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் அறிவித்து உள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் என்ற மருந்துக்கு தமிழகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ,அந்த மருந்து பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க தமிழகஅரசு, சென்னை உள்பட பல மாவட்ட தலைநகரங்களில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் சார்பில் சென்னையில் சில பகுதிகளில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்து வருகிறது. அதன்படி, சென்னையில் 9 இடங்களிலும், காஞ்சிபுரம், கோவையில் தலா ஒரு இடங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.