சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமடைந்து வந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா 2வது அலை பாதிப்பில் இருந்து சென்னையில் 74% குணமடைந்துள்ளனர்; மக்கள் பீதி அடைய வேண்டாம், கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடியுங்கள் என அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை தமிழகத்தில் நேற்று 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,72,602 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் நேற்று 6,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சென்னையில் 3,64,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 32,917 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 58 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,952 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 3,26,212 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் குறித்து பிரபல கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் (Vijayanand – Covid Data Analyst) கூறியிருப்பதாவது,