புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாக முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வே.நாராயணசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கையில், புதுவை மாநிலத்தில் 2021 ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு, முன்னாள் முதலமைச்சராக பணியாற்றிய நான் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று, தெரிவித்துள்ளார்.