2021 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி, மொத்தமாக 159 தொகுதிகளில் வென்றுள்ள நிலையில, திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்றுள்ளதோடு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகள் 8 இடங்களில் வெல்ல, சட்டப்பூர்வமாக திமுகவின் சட்டமன்ற இடங்கள் 133ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், கடந்த 1996ம் ஆண்டிற்கு பிறகு, திமுக, சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியை ஈட்டியுள்ளது. அதேசமயம், திமுக இதுவரை பெற்ற தனிப்பெரும்பான்மைகளிலேயே இதுதான் குறைந்தபட்ச தனிப்பெரும்பான்மை ஆகும்.

கடந்த 1967ம் ஆண்டு 138 இடங்களையும், 1971ம் ஆண்டு 184 இடங்களையும், 1989ம் ஆண்டு 151 இடங்களையும், 1996ம் ஆண்டு 173 இடங்களையும் திமுக பெற்றிருந்தது. இப்போது, 133 இடங்களை வென்றுள்ளது.