செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பொதுத்தொகுதியை, 1609 வாக்குகள் வித்தியாசத்தில், பாமகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
விசிக சார்பில், இத்தொகுதியில், பாலாஜி என்பவர் பானைச் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பாமக சார்பில் ஆறுமுகம் என்பவர் போட்டியிட்டார்.
காலை முதல் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்த நிலையில், ஒருவழியாக 1609 வாக்குகள் வித்தியாசத்தில், திருப்போரூர் தொகுதி விசிக வசம் வந்துள்ளது.
ஏற்கனவே, நாகப்பட்டினம்(பொது) தொகுதியில் வென்றிருந்தது அக்கட்சி. தற்போது திருப்போரூர் என்ற பொதுத்தொகுதியும் அக்கட்சியின் வசம் சென்றுள்ளது. விசிக, சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு இதை சாதித்துள்ளது.