திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சர்ச்சைக்குரிய முறையில், 50 வாக்குகளுக்கும் குறைவாக தோற்றதாக அறிவிக்கப்பட்டவர் திமுக வேட்பாளராக நின்ற அப்பாவு. இவர், கடந்த 2001 தேர்தலில், அதே தொகுதியில் சுயேட்சையாக களம் கண்டு வென்றவர்.

2016 தேர்தலில், அதிமுகவின் இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். பல்லாண்டு காலம் இழுத்தடித்த வழக்கு, ஆட்சி முடிவதற்கு ஓராண்டு காலத்திற்கும் குறைவான மாதங்கள் இருக்கையில், ஒரு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.

மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். ஆனால், அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அதிமுக வேட்பாளர் இன்பதுரை. உயர்நீதிமன்ற தீர்ப்பை அப்படியே நிறுத்தி வ‍ைத்தது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம், அந்த வழக்கு தொடர்பாக எப்போது முடிவெடுக்கும் என்று தெரியாத நிலையில், அடுத்த தேர்தலே வந்து, அதே தொகுதியில், அதே அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு, தற்போது வெற்றியையும் ஈட்டிவிட்டார் அப்பாவு.

நீதிமன்றத்தில் பெறமுடியாத நீதியை, மக்கள் மன்றத்தில் பெற்றுவிட்டார் அப்பாவு.