சென்னை மாகாணமாக இருந்தது முதற்கொண்டு, 1956க்குப் பிறகான காலம் தொடங்கி, முதல்வர்கள் வரிசையைப் பார்த்தால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை, முதல்வராக பதவியேற்கவுள்ளது இதுதான் முதல்முறை.
கடந்த 1920ம் ஆண்டு, சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராக பதவியேற்ற சுப்பராயலு ரெட்டியார் தொடங்கி, எடப்பாடி பழனிச்சாமி வரை, தந்தை – தாயை அடுத்து, மகனோ அல்லது மகளோ முதல்வர் வாய்ப்பை பெற்றதில்லை.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் மனைவி வி.என்.ஜானகி, சில நாட்கள் முதல்வராக இருந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் முதல்வராக இருந்தது அது ஒரு உதாரணம். ஆனால், ஒரே குடும்பத்தில், அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் முதல்வராவது என்ற பெருமையை, மு.க.ஸ்டாலின் மட்டுமே முதன்முறையாக பெறுகிறார்.
இவரின் தந்தை மு.கருணாநிதி, தமிழ்நாட்டின் முதல்வராக, 5 முறை, மொத்தம் 19 ஆண்டுகள் பதவி வகித்தார். தற்போது, ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.