டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
2019ஆம் ஆண்டு இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று பல ரசிகர்களை கவர்ந்தார்.
இதன் பின் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்ககேற்றார் ரம்யா. இந்நிகழ்ச்சியில் சிங்கப் பெண் என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் வாணி போஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம்.
இந்நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்திருக்கும் பரசு பாண்டியன் அத்தகவலை மறுத்திருக்கிறார்.