மலப்புரம்: கேரளா: மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நிலம்பூர் தொகுதியின் யுடிஎஃப் வேட்பாளருமான வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 56. இதுஅந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நிலம்புர் தொகுதியில், ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) சார்பில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.வி.பிரகாஷ் போட்டியிருந்தார். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குன்னுமேல் கிருஷ்ணன் நாயர் மற்றும் சரோஜினி அம்மா ஆகியோரின் மகனான வி வி பிரகாஷ் எடக்காராவில் பிறந்தார். தனது கல்லூரி நாட்களில் கே.எஸ்.யு ஆர்வலராக இருந்ததார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வருகிறார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக போட்டியிட்டார்.