கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.
நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.
பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்ட அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் ரசிகர்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் நலமாக இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hello everyone!
I have tested positive for Covid. I have isolated myself.
I request those who have come in contact with me to get tested.
I request all my well wishers and fans not to worry as I am doing fine . Stay home, stay safe . pic.twitter.com/CAiKD6LzzP— Allu Arjun (@alluarjun) April 28, 2021