கொரோனா தொற்று ஏற்பட்டு சில தினங்களாக அசோக் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் தாமிரா இன்று காலை மூச்சுத்திணறல் அதிகமாகி உயிரிழந்தார்.

இரட்டைச்சுழி படத்தில் இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா இருவரையும் ஒன்றாக இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆண் தேவதை படத்தை இயக்கியிருந்தார்.

கொரோனா தொற்றால் இயக்குநர் இறந்திருப்பது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.