ஜெனிவா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் , ஒரு மாதத்தில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பு உச்சம் பெற்றுள்ளது. இதனால், மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில்,தினசரி உயிரிழப்பும் 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கிடையில் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லி உள்பட பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. இந்தியா கொரோனா வைரஸ் கடுமையாக பரவியவதற்கு அரசியல் கட்சிகள் தான் காரணம், என்றும் தேர்தல் ஆணையமும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் சரியான திட்டமிட்டல் இல்லாததால், தொற்று பாதிப்பு கைமீறி சென்றுவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு கொரோனா இருப்பதை அறியாமல், எந்தவித பாதுகாப்பு நெறிமுறைகடையும் கடைபிடிக்காமல் வெளியே சுற்றிக் கொண்டிப்பதால், அவர் மூலம் ஒரு மாதத்தில் 406 பேருக்கு தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக்கவசமும் அணிய வேண்டும் என்று கூறியதுடன், ஒருவருக்கு ஒருவர் இடைவெளி குறைந்தது 5 அடி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே வெளியே செல்லும் நபர்கள் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
ஒருவர் சமூக இடைவெளியை 50% கடைபிடித்தாலே ஒருவரிடமிருந்து 15 பேருக்கு வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இதை சுட்டிக்காட்டி உள்ள மத்தியஅரசு, பொதுமக்கள் சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.