அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

புள்ளிகள் பட்டியலில், பஞ்சாப் அணி ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா அணி கடைசி இடத்திலும் உள்ளது. இன்றையப் போட்டியில் வெல்வதன் மூலம், பஞ்சாப் அணி, புள்ளிகள் பட்டியலில் மேலும் ஏற்றம் காண முயற்சிக்கலாம்.

அதேசமயம், கொல்கத்தா அணிக்கு வீழ்ச்சியிலிருந்து மீளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பஞ்சாப் அணியில், கேப்டன் கேஎல் ராகுலும், துணைக் கேப்டன் அகர்வாலும் களமிறங்கியுள்ளனர். ராகுல் 13 ரன்களும், அகர்வால் 14 ரன்களும் அடித்துள்ளனர். அந்த அணி, 5 ஓவர்களில், 29 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.