லிங்குசாமி இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்.

அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

இவர் 2014-ம் ஆண்டு துபாயில் பணியாற்றும் அனில் ஜான் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். 2018-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை.

இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

 

[youtube-feed feed=1]